Friday 20 November 2015

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சோழர் கால சிலை பறிமுதல்

நியூயார்க்: தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட, 1,000 ஆண்டு பழமையான சோழர் காலத்து வெண்கலச் சிலையை, அமெரிக்க அரசு அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.இந்தியாவை சேர்ந்த பிரபல சிலை கடத்தல்காரன் சுபாஷ் கபூர். இவன், தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து, பழமை வாய்ந்த, அரிய சிலைகளை கடத்தி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில், அதிக விலைக்கு விற்று வந்தான். இதன் மூலம், பல ஆயிரம் கோடி ரூபாயை, அவன் சேர்த்துள்ளான்.அமெரிக்காவில், இண்டியானா மாகாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில், சோழர் காலத்தை சேர்ந்த, சிவன் - பார்வதி சிலை இருந்தது. வெண்கலத்தாலான, 1,000 ஆண்டு பழமையான இச்சிலை, தமிழகத்தை சேர்ந்த ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து, அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்கத்துறையை சேர்ந்த, உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை பிரிவுக்கு, சோழர் கால சிலையை, அருங்காட்சியகம் ஒப்படைத்துள்ளது. 2004ல், தமிழகத்தில் இருந்து சிலை கடத்தப்பட்டதும், உண்மையை மறைத்து, போலி ஆவணங்களை காட்டி, அருங்காட்சியகத்துக்கு சுபாஷ் கபூர் விற்றதும், விசாரைணயில் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment