Thursday 26 November 2015

பிளஸ் 2 மாணவன் சொந்த செலவில் மூங்கில் பாலம்

மும்பை: சேரி பகுதி மாணவர்கள், பள்ளி செல்ல சாக்கடையை கடந்து செல்வதை கண்ட பிளஸ் 2 மாணவன் சொந்த செலவில் மூங்கில் பாலம் கட்டி கொடுத்து அனைவரது பாராட்டை பெற்றுள்ளார். மும்பை "சாதே' நகரில் ஒதுக்குபுறமாக ஒரு சேரி பகுதி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில் சேரிப் பகுதியை ஒட்டியுள்ள 50 அடி நீள சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது. இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வசிக்கும் 17 வயது இஷான் பல்பாலே என்கிற இளைஞன் தினசரி பார்த்திருக்கிறார். சீருடை அணிந்த குழந்தைகள் சாக்கடையில் இறங்கி பள்ளிக்கு செல்வதை பார்த்து தனது பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் சமூக அமைப் பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார். உள்ளூர் நகராட்சி களிடமும் இந்த விஷயம் சென்று இருக்கிறது.ஆனால் ,அவர்கள் கடமையை செய்வதில் தமிழ்நாட்டை விட சிறந்தவர்கள். தப்பித்தவறிக் கூட அந்த சேரி பக்கம் சென்று பார்க்கவில்லை.வெறுத்துப்போன இஷான் தனது சேமிப்புப்பணம், நண்பர்களின் கடன் என பெரும் பணம் திரட்டி சேரி குழந்தைகள் சாக்கடையை கடக்க 50 அடி நீளம், 5 அடி அகலத்தில் ஒரு பாலத்தையே கட்டிவிட்டார். தற்போது பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி சேரிப்பகுதிகளில் குடியிருக்கும் 15,000 மக்களுக்கும் இந்த பாலம் தான் சாக்கடையை கடக்க உதவி செய்கிறது. இது தொடர்பாக 12ம் வகுப்பு படிக்கும் பால்பலே கூறுகையில்,மாணவர்கள் 50 அடி சாக்கடையை தாண்டி செல்ல வேண்டும் என்ற செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ஒரு எளிய தீர்வு, அங்கு பாலம் கட்ட வேண்டும். எனவே அவர்களுக்கு நான் உதவ முடிவு செய்தேன். இதனால் பாலம் கட்டினேன். மூங்கில் கொண்டு பாலத்தை கட்டுவது எளிய வழி என்பதால் அதனை தேர்வு செய்தேன். மாநகராட்சி நிரந்தரமாக ஒரு பாலத்தை கட்டினால், இதனை அகற்ற எளிதாக இருக்கும் என கூறினார். பால்பலே இந்த பாலத்தை கட்டுவதற்கான செலவு தொகையை அவரது தந்தை ராஜூ செய்துள்ளார். தனது மகனின் சாதனை குறித்து அவர் கூறுகையில்,வேறு ஒரு பணிக்காக தான் பணம் செலவு செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், பால்பலே, சாதே பகுதி மக்களுக்காக பாலத்தைகட்ட விரும்பினார். இதனால், பாலத்தை எட்டுநாளில் கட்டி கான்டிராக்டர் முடித்தோம் என கூறினார்.

No comments:

Post a Comment