Thursday, 3 December 2015

Help for Chennai

சென்னை: பெய்து வரும் பலத்த மழையில் சிக்கி பலர் வெள்ளத்தில் தவித்து வருகின்றனர் . பலர் மீட்பு படையினர் வருகைக்காக காத்திருக்கின்றனர் .

ராணுவ ஹெலிகாப்டர் மற்றும படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பல இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் முதல் தளம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மழை நீரில் பல இடங்களில் ஆதரவற்ற பிணங்கள் மிதப்பதை காண முடிகிறது. சென்னையில் இருந்து பலரும் தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர் .ரயில்கள் பஸ்கள் முறையாக ஓடாததால் பலரும் பஸ்நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக காத்திருக்கின்றனர் .

கடற்கரை - வேளச்சேரி பாதையில் மட்டுமே ரயில் சேவை உள்ளது, எனவே திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலை மோதுகிறது .

மணலி சத்தன்காடு போலீஸ் ஸ்டேஷன் அருகே 300 பேர் உணவுக்காக காத்திருக்கின்றனர் அண்ணா ஆதர்ஸ் பள்ளியில் 2 ஆயிரம் பேர் உணவு, குடி நீருக்காக காத்திருக்கின்றனர் .கிண்டி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அலுவலகங்களி்ல் சிக்கியவர்கள் அலுவலகம் விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர் . சி ஐ டி நகர் முத்துவீரன் கோவில் தெருவில் பலர் உதவிக்காக காத்திருக்கின்றனர் . துரைப்பாக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது

இது போல் பல இடங்களில் வீடுகளில் இருந்து உதவி ெஹல்ப் மீ என்ற சப்தம் கேட்கிறது. மின்சாரம் இல்லாததால் பல குடியிருப்புகளில் ஜெனரேட்டர் ஓடியது ஆனால் டீசல் வாங் முடியாததால் இதுவும் செயல் இழந்தது அடையாறு, நந்தனம் பகுதியில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . அண்ணாநகர், கே கேநகர் தி நகர் நந்தனம் சிக்னர் பகுதிகளிலும் இன்று வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அமைந்தகரை- அண்ணாசாலையில் கூவம் ஆறு புகுந்துள்ளது .சென்ட்ரல் - எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் டிச 5 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன .

வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இன்று ராணுவ ஹெலிகாப்டரில் இருந்தபடி பார்வையிடுகிறார்chennai latest news க்கான பட முடிவு

No comments:

Post a Comment