Tuesday, 15 December 2015

200 days successfully running

தமிழில் வெளியான சூப்பர்ஹிட் படங்களே 50 நாளை தாண்டி ஓட தலையால் தண்ணி குடிக்கின்ற இன்றைய சூழலில் கடந்த மேமாதம் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படம் சென்னை சத்யம் தியேட்டரில் 200வது நாளை வெற்றிகரமாக தொட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று, சில சமயங்களில் இரண்டு ஷோ தான்.. இருந்துவிட்டு போகட்டுமே.. அதனால் என்ன..? ஆனால் நம்ம தமிழ்ப்படங்கள் மாதிரி இந்தப்படத்தை வலுக்கட்டாயமாக ஒட்டவில்லை. வலுவாக இருந்ததால் அதுவாகவே ஓடியது.
இத்தனைக்கும் இந்தப்படம் வெளியான மூன்றாம் நாளே படத்தின் சென்சார் காப்பி ஆன்லைனில் லீக்காகியும் கூட ரசிகர்கள் படத்தின் மீது வைத்திருந்த மரியாதையால் தான் இன்று 200வது நாளை இந்தப்படத்தால் வெற்றிகரமாக தொட முடிந்திருக்கிறது. குறிப்பாக இளைஞர் கூட்டம் இந்தப்படத்தை ஐந்து தடவைகளுக்கு குறையாமல் பார்த்தது தான் இந்தப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான அடித்தளமாக அமைந்தது. படத்தின் ஹீரோவாக நடித்த நிவின்பாலி, மூன்று கதாநாயகிகளான
சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நகைச்சுவைக்கு வினய்போர்ட் என பலரும் இந்தப்படத்தின் வெற்றிக்கு தூணாக நின்றனர்.
இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு அழகான காதல் காவியத்தை தந்திருந்தார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். படம் 6௦ கோடிக்கு மேல் வசூல் செய்து மலையாள சினிமாவின் இரண்டாவது அதிக வசூல் படம் என்கிற சாதனையையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. இத்தனைக்கும் மேலாக தெலுங்கிலும்
தமிழிலும் ரீமேக் ஆகிறது. கேரளாவிலேயே ஒரு ஹிட் படம் 150வது நாளை தாண்ட முடியாத நிலையில் தமிழ்நாட்டில் ஒரு மலையாளப்படம் 200 நாட்களை தாண்டியுள்ளது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் தான்.

No comments:

Post a Comment