Friday, 20 November 2015

வைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்பு குடிநீர் - இயற்கை மருத்துவம்

வைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்பு குடிநீர் - இயற்கை மருத்துவம்
டெங்கு, சிக்குன் குன்யா, பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் எனப் புதுப்புது வைரஸ் காய்ச்சல் வகைகள் பெருகிவருகிறது. டெங்கு, சிக்குன் குன்யா, பன்றிக்காய்ச்சல் போன்ற காய்ச்சலை கட்டுப்படுத்தவும், அழிக்கவும் சித்தர்கள் அறிமுகப்படுத்திய நிலவேம்புக் குடிநீர், அனைத்து வகையான காய்ச்சல்களையும் தீர்க்கவல்லது.
நிலவேம்புக் குடிநீரில், நிலவேம்புடன் வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனத் தூள், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்படாகம் போன்ற ஒன்பது வகையான மூலிகைகளின் கலவை அடங்கியுள்ளது. இரண்டு தேக்கரண்டி நிலவேம்புத் தூள் கலவையுடன், இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவைத்து அரை டம்ளராக வற்றியவுடன், கசடை வடிகட்டிவிட்டு அருந்த வேண்டும்.
அனைத்து வகையான காய்ச்சல்களும் நீங்கும். காய்ச்சல் நீங்கிய பின் ஏற்படும் உடல் வலி மற்றும் உடல் சோர்வு போன்றவையும் அகலும். மருத்துவரின் ஆலோசனைப்படி நீரிழிவு நோயாளிகளும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம். தினமும் இரண்டு வேளை பருகலாம். தயாரித்து மூன்று மணி நேரத்துக்குள் குடிநீரை அருந்துவது சிறப்பு.
நீர் வடிவில் வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீர், விரைவில் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கும் வல்லமைகொண்டது. காய்ச்சல் காரணமாக மந்தமடைந்த பசித் தீயைத் தூண்டவும், சோர்வடைந்த மனதுக்குத் தெளிவைத் தரவும், காய்ச்சலின் உக்கிரத்தைக் குறைக்கவும் நிலவேம்பும் பற்படாகமும் உதவுகின்றன. நிலவேம்புக் குடிநீர் காய்ச்சலைக் குறைக்கும் மாமருந்து.

No comments:

Post a Comment