பீஜிங், சீனாவில், சேதமடைந்த பாலத்திற்கு மாற்றாக, 36 மணி நேரத்தில், புதிய பாலத்தை அந்நாட்டு பொறியாளர்கள் கட்டியுள்ளனர்.சீன தலைநகர் பீஜிங்கில், விமான நிலையம் மற்றும் இரண்டு முக்கிய நெடுஞ்சாலைகளை இணைக்கும், 1984ல் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தை, தினமும், 20 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தி வந்ததால் பழுதடைந்திருந்தது.அந்த இடத்தில் புதிய பாலத்தை கட்ட, சீன அரசு முடிவு செய்தது. அந்த பாலத்தின் போக்கு வரத்தை திருப்பி விட முடியாது என்பதால், போக்குவரத்துக்கு பாதிப்பில்லாமல், புதிய பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.நவீன தொழில்நுட்பம் மற்றும் இயந்திர மனிதர்கள் எனப்படும், 'ரோபோ'க்கள் உதவியுடன், 26 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது. பொறியாளர்கள் விரைவாக செயல்பட்டு, 36 மணி நேரத்தில், புதிய பாலத்தை கட்டி முடித்தனர்; சில மணி நேரங்களில், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
No comments:
Post a Comment