Friday, 20 November 2015

உலகில் சிறந்த 100 பல்கலைகள்: இந்தியா முதன் முதலாக தேர்வு

லண்டன்: உலகில், மிகச் சிறந்த, 100 பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில், முதன் முதலாக, பெங்களூரில் உள்ள, ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும், இந்திய அறிவியல் மையம் இணைந்துள்ளது.டைம்ஸ் உயர்கல்வி அமைப்பு, உலகின் தலை சிறந்த, 100 பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
இதை தயாரித்த, பில் பேட்டி கூறியதாவது: இந்த பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த, ஸ்டான்போர்டு, கால்டெக் மற்றும் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையம் ஆகியவை, முதல் மூன்று இடங்களைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளன. இந்தாண்டு, இந்த பட்டியலில் முதன் முதலாக, இந்தியா இணைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், விமான பொறியியல், உருக்கு உள்ளிட்ட துறைகளில், இந்தியர்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். கூகுள், மைக்ரோசாப்ட், இன்போசிஸ், விப்ரோ, டாட்டா போன்ற, தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியர்களையே, தலைமை பொறுப்பில் நியமித்துள்ளன. இந்தியாவில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியின் தரம் மேம்பட்டு வருவதையே இது காட்டுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்கா முன்னணி:


உலகின் மிகச் சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகளில், இந்தாண்டு, அமெரிக்காவில், 31 பல்கலைகள் இடம் பெற்றுள்ளன. இது, 2014ல், 34 ஆக இருந்தது. அதே சமயம், இதே காலத்தில், ஆசிய பல்கலைகளின் எண்ணிக்கை, 18லிருந்து, 25 ஆக உயர்ந்துள்ளது. ஆசிய பல்கலைகளில், முதல் 30 இடங்களில், ஜப்பான், சீனா, கொரியா, தைவான், இந்தியா ஆகிய ஆறு நாடுகள் இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment