Sunday 27 December 2015

முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள்!

முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள்!
வீடு, வாகனங்கள், பணியிடம், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் முதலுதவிப் பெட்டி அவசியம் இருக்க வேண்டும். சில நூறு ரூபாய் மட்டுமே செலவாகும் முதலுதவிப் பெட்டி கைவசம் இருப்பது, விலை மதிப்பற்ற நமது உயிருக்குப் பாதுகாப்பு.
வீட்டில் இருக்கவேண்டிய முதலுதவிப் பொருட்கள்
1. ஆஸ்பிரின் 75 மி.கி
மாரடைப்பின்போதுரத்தம் வேகமாக உறையும். இதனால், இதயத்துக்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்படும். ஆஸ்பிரின், ரத்தம் உறைவதைத் தடுக்கும். எனவே, மாரடைப்பு ஏற்படும் சமயங்களில், இது உதவும். வீட்டில் நான்கு மாத்திரைகள் எப்போதும் இருப்பது நல்லது.
2. குளோப்பிடோகிரெல் 75 மி.கி
இதுவும் மாரடைப்பு ஏற்படும் சமயங்களில் ரத்த உறைதல் ஏற்படுவதைத் தடுக்க உதவும் உயிர் காக்கும் மாத்திரையே.
3. சில்வர் சல்ஃபாடயாஸைன் களிம்பு
சிறிய தீப்புண்கள் ஏற்பட்டால், இந்த களிம்பை புண்கள் மேல் தடவலாம்
4. மர ஸ்கேல்
கை முறிவு ஏற்பட்டால், முதலுதவி செய்யும்போது கட்டுப்போட இது உதவும
5. கைக்குட்டை
கட்டுப்போட உதவுவதில் கைக்குட்டைக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே, சற்று பெரிதான இரண்டு மூன்று கைக்குட்டைகள் எப்போதும் முதலுதவிப் பெட்டியில் இருக்கட்டும்.
6. காட்டன் பேட் (Guaze pod)
ரத்தம் வரும்போது கட்டுப்போட, காட்டன் பேட் மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க முடியும்.
7. ஐஸ் பேக் (Ice bag)
ஒத்தடம் கொடுக்கவும், சில நேரங்களில் குறிப்பிட்ட இடத்தில் ரத்தம் பாய்வதைக் கட்டுப்படுத்தவும், வீக்கம், வலி குறைப்பதற்கும் ஐஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.
8. குளுக்ககான் ஊசி
சர்க்கரை நோயாளிகள் இருக்கும் வீடுகளில் அவசியம் இந்த ஊசியை வைத்துக்கொள்வதுநல்லது. முதலுதவி செய்யும்போது, இந்த ஊசி உதவும்.
9. பாரசிட்டமால் மாத்திரை
காய்ச்சல் வந்தால் பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். இரு நாட்கள் ஆகியும் காய்ச்சல் கட்டுப்படவில்லைஎனில், மருத்துவரை அணுகுவது அவசியம்.
ஆசனவாய் பாரசிட்டமால் (Paracetamol suppository)
காய்ச்சலின்போதுசில குழந்தைகளுக்கு உடலின் வெப்பநிலை மேலும் அதிகரித்து, வலிப்பு ஏற்படக்கூடும். அதைத் தவிர்க்கவும், வலிப்பு ஏற்பட்டால் உடல் வெப்ப நிலையைச் சட்டென குறைக்கவும், இந்த மாத்திரையை ஆசனவாயில் வைக்கலாம்.
10. கிருமி நாசினி
காயம்பட்ட இடத்தில் மருந்திடுவதற்குமுன், கிருமிகளை அழித்து, சுத்தம் செய்ய கிருமி நாசினி அவசியம். இது காயங்களில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும்.
11.தெர்மா மீட்டர்
சராசரி உடல் வெப்பநிலைக்கு மேல் ஒரு டிகிரிக்கும் அதிகமான காய்ச்சல் இருந்தால், அதைக் கண்டறிந்து உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல உதவும்.
12. பருத்திப் பஞ்சு
புண்கள், காயங்களில் கட்டுப்போடுவதற்கும், வெட்டுக்காயங்களின் போது ஏற்படும் ரத்தக்கசிவைக் கட்டுப்படுத்தவும் பருத்திப் பஞ்சு உதவும்.
13. கத்தரிக்கோல்
பிரத்யேகக் கத்தரிக்கோல் மூலமாகத்தான் முதலுதவிப் பொருட்களைக் கத்தரிக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப வெவ்வேறு சைஸ்களில் வாங்கிவைத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment